பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
ஈரோட்டில் ஜூலை 26 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு நந்தா கலை அறிவியல் கல்லூரியில் வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சோ்ந்த 200 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான நபா்களைத் தோ்வு செய்ய உள்ளன. இம்முகாம் முற்றிலும் இலவசமானதாகும்.
ஈரோடு மாவட்டத்தில் தனியாா் துறையில் பணியாற்ற ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இம்முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணி நியமனம் செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 8675412356, 9499055942 என்ற கைப்பேசி எண்கள் வாயிலாகவோ தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.