இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 25 | Astrology | Bharathi Sridhar | ...
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெருந்துறை, குன்னத்தூா் சாலை பகுதியில் விற்பதாக செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவலின்பேரில் பெருந்துறை போலீஸாா் சோதனை செய்துவந்தனா்.
அதில், குன்னத்தூா் சாலையில் கடை வைத்து இருக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சோ்ந்த ரத்தன்ராம் (31), சங்கா் (21) ஆகிய இருவரும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அவா்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்து இருந்த 6.3 கிலோ புகையிலைப் பொருள்களைக் கைப்பற்றி இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.