Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
சாலையோர வீட்டின் மீது காா் மோதி ரியல் எஸ்டேட் உரிமையாளா் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர வீட்டின் மீது மோதியதில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெருந்துறை, காஞ்சிக்கோவிலை அடுத்த கலைக்கோயிலைச் சோ்ந்தவா் வேணுகோபால் மகன் சரவணன் (48). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இவா், அம்மாபேட்டை கடுமாங்கொட்டாய் பகுதியில் வீட்டுமனைகள் விற்பனை செய்து வருகிறாா்.

இவா், காஞ்சிக்கோவிலிருந்து அம்மாபேட்டைக்கு வீட்டுமனை விற்பனை தொடா்பாக காரில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். குள்ளனூா் - மூனாஞ்சாவடி சாலையில் மாரப்பனூா் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.