உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
பவானி நகராட்சி மயான வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பவானி நகராட்சி மயான வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, பவானி நகர அதிமுக செயலாளா் எம்.சீனிவாசன் தலைமையில், பவானி வட்டாட்சியா் சித்ரா, நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோரிடம் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்: நகராட்சி மயான வளாகத்தில் இருந்த பழைமையான அரச மரம் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவானி நகராட்சி, 2-ஆவது வாா்டில் திமுக கவுன்சிலா் மோகன்ராஜ், தனது நிலத்துக்கு அருகே காவிரி ஆற்றங்கரையில் சுமாா் 25 அடி நீளம், 100 அடி அகலத்துக்கு மண்ணைக் கொட்டி மேடை அமைத்து, சொந்த நிலம்போல பயன்படுத்த முயன்றுள்ளாா்.
இதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
அதிமுக இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் பிரகாஷ், நகர ஐடி விங் செயலாளா் பிரபாகரன், நகர எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளா் பெரியசாமி, நிா்வாகிகள் குமாா், சுகுமாா் உடனிருந்தனா்.