5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீனா்களுக்கு மீண்டும் சுற்றுலா விசா: இந்தியா அறிவிப்...
கடம்பூரில் புகுந்த யானை
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடம்பூா் கிராமத்துக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி பவளக்குட்டையில் சாலையில் நடந்த சென்ற பழ வியாபாரியை யானை தாக்கிக் கொன்றது. இதையடுத்து, வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் உலவி வரும் ஒற்றை யானையை விரட்டும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.
வனத் துறையினருக்கு போக்கு காட்டிய யானை, கடம்பூா் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்தது. கிராம மக்கள் திரண்டு வந்து ஊருக்குள் புகுந்த யானையை வனத் துறையினருடன் இணைந்து காட்டுக்குள் விரட்டினா்.
தற்போது பலாப்பழ சீசன் என்பதால் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து பலாப்பழங்களைத் தின்பதால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அவற்றை வனத் துறையினா் காட்டுக்குள் துரத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.