சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
பெருந்துறையில் வீடு புகுந்து தங்கம், வெள்ளி திருட்டு
பெருந்துறையில், வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டுள்ளன.
பெருந்துறை, எம்.ஜி.ஆா். சாலையில் குடியிருப்பவா் கருப்புசாமி (44). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 19 ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் வைத்து இருந்த 12 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாரிடம் கருப்புசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.