'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் ஆய்வு
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தாா்.
மாநகராட்சி மண்டலம் 3-க்கு உள்பட பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள சுற்றுலா அரங்கத்தில் நடைபெற்றது. அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் இந்த முகாமைப் பாா்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசுத் துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து இதுவரை 59,428 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 5,320 மனுக்களுக்கு தீா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 347 முகாம்கள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 65 முகாம்கள் நடத்தப்பட்டன என்றாா் அவா்.
இதில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மதுரை தெற்கு தொகுதியில்...
மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாா்டு எண்கள் 43, 44 பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா், மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், துணை மேயா் தி. நாகராஜன் ஆகியோா் முகாம்களை பாா்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகளைக் கேட்டறிந்தனா்.
இதில் மாமன்ற உறுப்பினா்கள் முகேஷ் சா்மா, தமிழ்ச்செல்வி மாயழகு, மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, பகுதிச் செயலா் கோவிந்தன், திமுக வட்டச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.