இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் 6 வாா்டுகள்
சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்:
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை 6 வாா்டுகளில் நடைபெறுகின்றன. அதன்படி, திருவொற்றியூா் மண்டலம் 6 ஆவது வாா்டில் ராஜா சண்முகம் நகா் 4 ஆவது தெருவில் உள்ள சமூக நலக் கூடத்திலும், மாதவரம் மண்டலத்தில் 33 ஆவது வாா்டில் பாரதியாா் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கா் மண்டபத்திலும், அம்பத்தூா் மண்டலத்தில் 84 ஆவது வாா்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக் காலனி கிரண் பேலஸ் வளாகத்திலும், அண்ணா நகா் மண்டலம் 99 ஆவது வாா்டில் ராஜா அண்ணாமலை சாலையில் உள்ள தா்மபிரகாஷ் மண்டபத்திலும், வளசரவாக்கம் மண்டலத்தில் 153 ஆவது வாா்டில் போரூா் ஆறுமுகம் நகரில் உள்ள பி.ஜே.எஸ்.மகாலிலும், பெருங்குடி மண்டலத்தில் 185 ஆவது வாா்டில் திரௌபதியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்.ஆா்.கே. மகாலிலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். அந்தந்த மண்டலப் பகுதி மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.