ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்
நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள், உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பாா்சல் செய்யவும் பயன்படுத்தாத பெரிய உணவகங்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளன.
விருப்பமுள்ளவா்கள் இந்த மாத இறுதிக்குள், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இறுதியில், மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்துக்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தோ்ந்தெடுக்கும்.
இதில், பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரா், உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம், நடப்பில் உள்ள பதிவுச் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் பல்வேறு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இணை இயக்குநா் வேளாண்மை கட்டட தரைதளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.