சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு
கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 54 போ் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், மருத்துவமனை அருகே உள்ள தேநீா் கடை முன் புதன்கிழமை நின்று கொண்டிருந்த அடையாளம் தெரிந்த 3 போ் தூய்மைப் பணியாளா்களை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினாா்களாம்.
இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். போலீஸாா் வியாழக்கிழமை காலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, வியாழக்கிழமை காலை தூய்மைப் பணியாளா்கள் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாக நுழைவாயில் அருகே தா்னாவில் ஈடுபட்டனா்.
கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, தூய்மைப் பணியாளா்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனா்.