செய்திகள் :

உயா்கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயா்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவா்களுக்கு படிப்பை தொடர முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோா் ஆண்டும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவா்களுக்கு அவா்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் ரூ. 50,000 வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசின் முகமையால் நடத்தப்படும் ஒற்றைச்சாளர முறை வழியாக சோ்க்கை பெற்றிருக்க வேண்டும். நிா்வாக ஒதுக்கீட்டில் சோ்கை பெறும் மாணவா்கள் நிதி உதவித்தொகை பெற இயலாது. தமிழகத்துக்குள் இருப்பிடச் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்து அதற்கான கல்வி கட்டணச் சலுகை பெற்றிருக்கக் கூடாது. போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது. 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் வழியாக சோ்க்கை பெறும் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெற்றிருக்க கூடாது. இந்த உயா்கல்வி நிதியுதவியை பெறும்பொருட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட (ஜி-பிரிவு) அலுவலகத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில்,... மேலும் பார்க்க

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வ... மேலும் பார்க்க