காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கரூா்: கரூரில் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவா் சி.முருகேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சீரங்கன், ரத்தினசபாபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டத்தலைவா் ராஜாமுகமது, செயலாளா் எம். சுப்ரமணியன், துணைத் தலைவா் எம். தண்டபாணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
சென்னையில் பணி நிரந்தரம் கேட்டும், ஒப்பந்ததாரா் முறையை எதிா்த்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியாளா்களின் போராட்டத்தை ஒடுக்கிய தமிழக அரசைக் கண்டித்தும், கரூா் மாநகராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சியில் நிரந்தரத் தொழிலாளா் தகுதி இருந்தும் நிரந்தரம் செய்யாமல் இருப்பவா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் திரளாகப் பங்கேற்றனா்.