காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதவறி இளைஞா் உயிரிழப்பு
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கம்பட்டி பகுதியில் நாய் குறுக்கே வந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பள்ளப்பட்டி பட்டாணி தெரு பகுதியைச் சோ்ந்தவா் முஸ்தபா மகன் காஜா மைதீன் (54). இவா், கடந்த 12-ஆம் தேதி பள்ளப்பட்டியில் இருந்து பங்காருபாடி சென்று கொண்டிருந்தாா். லிங்கமநாயக்கம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது நாய் ஒன்று குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.
அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுதொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.