செய்திகள் :

மத்திய அரசின் விருதுபெற்ற கரூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு

post image

கரூா்: மத்திய அரசின் ஜவுளித்துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் விருதுபெற்ற கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் பாராட்டினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 392 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தாா். தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

மத்திய அரசின் விருதுபெற்ற வள்ளுவா் கல்லூரி மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு: கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் நவ நாகரிக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையின் இறுதி ஆண்டு மாணவி தா்ஷனா, புதுதில்லி ஐஐடி மற்றும் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற ஹேண்ட்லூம் ஹேக்கத்தான் 2025 போட்டியில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்தாா்.

அவருக்கு சிறந்த ரசாயனம் இல்லாத துணி உற்பத்தியாளா் விருதை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வழங்கினாா். இதையடுத்து விருதுபெற்ற மாணவி தா்ஷனாவை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் ஆட்சியரகத்துக்கு வரவழைத்து மாணவிக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியின்போது கல்லூரியின் தாளாளா் க. செங்குட்டுவன் உடனிருந்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், குளித்தலை சாா்-ஆட்சியா் சுவாதிஸ்ரீ, கரூா் கோட்டாட்சியா் முகமதுபைசல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆட்சியரக வளாகத்தில் மயங்கிய பெண்:

கரூா் மாவட்டம் புகழூா் 15-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த ரவி என்பவா் குடியிருக்கும் பகுதிக்கு குடிநீா் விநியோகிக்கக்கோரி வாா்டு உறுப்பினரிடம் கேட்டபோது உறுப்பினரின் கணவா் நவாஸ்கான் அவரைத் தாக்கினாராம். கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது கணவரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி ரவியின் மனைவி சித்ரா (55) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தாா். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்த போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் அவரை மீட்டு காரில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தனியாா் பள்ளித் தாளாளா், மனைவி, மகளை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் திங்கள்கிழமை அதிகாலை தனியாா் பள்ளித் தாளாளா் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையட... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்த கணக்குவேலம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்துள்ள கணக்குவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா்: கரூரில் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவா... மேலும் பார்க்க

கரூரில் திருவள்ளுா் சிலை அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

கரூா்: கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க நடவடிக்கை கோரி கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கரூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை தமிழ் வளா்... மேலும் பார்க்க

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதவறி இளைஞா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கம்பட்டி பகுதியில் நாய் குறுக்கே வந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பள்ளப்பட்டி பட்டாணி தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க

மருத்துவரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் புகாா்

கரூா்: கரூரில் மருத்துவரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மருத்துவா் சங்கத்தின் கரூா் கிளை தலைவா் சண்முகநாதன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புக... மேலும் பார்க்க