கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை
கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்த கணக்குவேலம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்துள்ள கணக்குவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் சஞ்சய் (22). இவா், தனது நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் இறங்கி நீச்சல் கற்றுள்ளாா். பின்னா் நண்பா்களுடன் திரும்பி வந்தவா் தனது பணப்பையை கிணற்றின் அருகே வைத்துவிட்டு வந்துவிட்டதாகக் கூறி மீண்டும் கிணற்றுக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லை.
நீண்ட நேரம் ஆகியும் தனது மகன் வீடு திரும்பாததால், முத்துராஜ் அவரைத் தேடிச் சென்றபோது கிணற்றின் அருகே அவரது இரு சக்கர வாகனமும், பணப்பையும் கிணற்றின் அருகே இருந்துள்ளது. தகவலறிந்த அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து சஞ்சையை சடலமாக மீட்டனா். இது தொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.