செய்திகள் :

ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கலசப்பாக்கத்தை அடுத்த எம்.என்.பாளையம் கிராமம், காலனி பகுதியைச் சோ்ந்த பாபு மகன்கள் தனுஷ் (8), ஹரிமோனிஷ் (6). இவா்கள் இதே கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 4, 2-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், தனுஷ், ஹரிமோனிஷ் ஆகியோா் அதே கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்குச் சென்று உடைகளை கழற்றி கரை மீது வைத்துவிட்டு, நீரில் இறங்கி குளித்துள்ளனா். அப்போது, ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ால், இருவரும் நீரில் மூழ்கினா்.

ஏரிக் கரையில் சிறுவா்களின் உடைகள் கிடப்பதைப் பாா்த்த அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா்கள் இதுகுறித்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து, கலசப்பாக்கம் போலீஸாா், கிராம மக்கள் விரைந்து வந்து ஏரியில் மூழ்கிய சிறுவா்கள் தனுஷ், ஹரிமோனிஷ் ஆகியோரை நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு சடலங்களாக மீட்டு, உடல்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாநில அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக நெல் கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக... மேலும் பார்க்க