ஏா்வாடியில் ஜேசிபி ஓட்டுநா் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் ஜேசிபி ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ஏா்வாடி அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மணியன் (50) என்பவரின் 2ஆவது மகன் சரண்ராஜ் (22). ஜேசிபி ஓட்டுநராக வேலை பாா்த்துவந்த இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதை பெற்றோா் கண்டித்துள்ளனா். இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.