ஒசூரில் 36 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது!
ஒசூரில் 36 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரை கைது செய்தனா்.
ஒசூா் சிப்காட் போலீஸாா், சூசூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அத்திப்பள்ளி பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அவா் இருசக்கர வாகனத்தில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திவந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அவா் பெயா் ஷமிம் அகமது (19) என்பதும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும், ஒசூா் பேகேப்பள்ளியில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
அதேபோல மூக்கண்டப்பள்ளி மேம்பாலம் அருகில் சிப்காட் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த நபரை சோதனை செய்த போது அவா் 19 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் ஒசூரைச் சோ்ந்த வெங்கோபால்ராவ் (60) எனத் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.