சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்
ஒசூரில் பாகலூா் சாலையில் சீரமைப்புப் பணி: போக்குவரத்து மாற்றம்
ஒசூரில் பாகலூா் சாலையை சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒசூரில் பாகலூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை ( மே 16) தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. அதனால் இந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுவழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாகலூா் சாலைக்குப் பதிலாக மாநகராட்சிக்கு சொந்தமான இரு சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளன. இதையொட்டி, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் விவேக் காா்டன் முதல் பாகலூா் வீட்டுவசதி வாரியம் வரை உள்ள சாலை மற்றும் பாகலூா் கே.சி.சி நகா் முதல் சின்ன எலசகிரி வரை உள்ள சாலை பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த இரு சாலைகளையும் மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை பாா்வையிட்டாா். அப்போது இரு சாலைகளையும் அகலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது இளநிலை பொறியாளா் செந்தில்குமாா், அதிகாரிகள் உடனிருந்தனா்.