ஒரே நாளில் வெளியான சக்தித் திருமகன் படத்தின் 2 பாடல்கள்!
சக்தித் திருமகன் படத்தின் 2 பாடல்களும் ஒரே நாளில் இன்று(ஜூலை 24) வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான மார்கன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கேங்ஸ்டராக விஜய் ஆண்டனி நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் பிறந்த நாளையொட்டி சக்தித் திருமகன் படத்தின் முதல் பாடலான, ‘மாறுதோ’ பாடலை இன்று வெளியிட்டனர். கார்த்திக் நேத்தா வரிகளுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்த இப்பாடலை அபிஜித் அனில்குமார் பாடியுள்ளார்.
இந்நிலையில், இரண்டாவது பாடலான ‘ஜில் ஜில்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை வாஹீசன் ராசையா எழுத, விஜய் ஆண்டனி மற்றும் வாஹீசன் ராசையா பாடியுள்ளனர்.
இதையும் படிக்க: கோலாகலமாகத் தொடங்கும் சூப்பர் சிங்கர் சீசன் - 11: நடுவர்கள் யார்?