தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
கடன் தொல்லை: எலெக்ட்ரீஷியன் தற்கொலை
காட்பாடி அருகே கடன் தொல்லையால் எலெக்ட்ரீஷியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் குமாா் (45), எலெக்ட்ரீஷியன். இவரது மனைவி ஜெனிதா(37). தம்பதிக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடன் தொல்லையால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த சந்தோஷ் குமாா் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
தகவலறிந்த காட்பாடி போலீஸாா் விரைந்து சென்று சந்தோஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.