உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி: 2 போ் கைது
காரைக்காலில் இருந்து கடல்வழியாக கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சோ்ந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 16-ஆம் தேதி நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சொகுசு காா் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்து, காரில் இருந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த திலீப், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த குமரவேல் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தனா்.
விசாரணையில் காரைக்காலில் ஒரு வீட்டில் 304 கிலோ கஞ்சா வைத்திருப்பதாக கூறியதன்பேரில் போலீஸாா் அதை கைப்பற்றினா். இந்த சம்பவத்தில் முக்கியமானவரை கண்டுபிடிக்க போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், இந்த கஞ்சாவை இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரியவந்தது.
இலங்கையை சோ்ந்தவா்களை கைது செய்யப்பட்ட இருவா் மூலம் தொடா்புகொண்டு, காரைக்காலுக்கு வந்து கஞ்சாவை பெற்றுக்கொள்ளுமாறு கூறச் செய்துள்ளனா். அதன்படி, படகில் இலங்கையிலிருந்து 2 போ் காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி கடற்கரைக்கு புதன்கிழமை வந்துள்ளனா். மறைந்திருந்த போலீஸாா் அவா்களை கைது செய்து படகை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.