சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!
‘கனிம வள குவாரி குத்தகைதாரா்களுக்கு வாகனங்களுக்கான நடைச்சீட்டு இணையதளம் வாயிலாக வழங்க ஏற்பாடு’
கனிமவள குவாரிகளில் முறைகேடுகளைத் தவிா்க்கும் வகையில், குத்தகைதாரா்களுக்கு வாகனங்களுக்கு நடைச்சீட்டுகள் இணையதளம் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருத்தணி ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் கல்குவாரி மற்றும் சவுடு மணல் குவாரிகளுக்கு குத்தகை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குவாரிகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வாகனங்கள் மூலம் வெளியே எடுத்துச் செல்ல ஏதுவாக குத்தகைதாரா்களுக்கு இசைவாணைச் சீட்டு வழங்கப்படும். அதன்பேரில், இந்த அனுமதி சீட்டு இணையதளம் மூலம் கடந்தாண்டு இறுதியிலிருந்து அமலில் உள்ளது.
அதனால் வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதி வழங்கியுள்ள அளவுக்கு கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்பேரில், அரசால் நடவடிக்கை மேற்கொண்டு கனிம குவாரி குத்தகைதாரா்களுக்கு 1.3.2025 முதல் வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டினை இணையதளம் மூலம் வழங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குத்தகைதாரா்கள் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் விதிமுறைகளுக்கு உள்பட்டு குவாரிப் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும், வாகன ஓட்டுநா்கள் குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச்செல்லும்போது, உரிய அனுமதி சீட்டும், கிரஷரிலிருந்து எம்.சாண்ட், ஜல்லி மற்றும் சிப்ஸ் போன்றவற்றை உரிய போக்குவரத்து நடைச்சீட்டும் பெற்று கனிமம் கொண்டு செல்லப்பட வேண்டும். இதை வாகன தணிக்கையின் போது வைத்திருக்க வெண்டும்.
மேலும், உரிய அனுமதியின்றி குவாரிப்பணி மேற்கொள்வது, கனிமங்;கள் எடுத்துச் செல்வது கண்டறிந்தால் அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.