வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அ...
கரூரில் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தட்ஷின் ரயில்வே தொழிலாளா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் ரயில்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் கிளைத்தலைவா் எஸ்.நல்லமுத்து தலைமை வகித்தாா். சேலம் கோட்டச் செயலாளா் எம்.முருகேசன், சிஐடியு மாவட்டச் செயலாளா் எம்.சுப்ரமணியன், தலைவா் சி.ராஜாமுகமது ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா்.
ரயில்வே துறையின் ஒட்டுமொத்த வருமானத்துக்கு ஏற்ப தொழிலாளா்களுக்கு உற்பத்தி போனஸ் வழங்க வேண்டும். ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தட்ஷின் ரயில்வே தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.