சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக அசம்பாவ...
கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு
கரூரில் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கட்டுமானத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
கரூா் மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் கரூா் மாவட்டக்குழு சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு செவ்வாய்கிழமை தொழிலாளா்கள் திரண்டனா்.
அப்போது, அங்கு வந்த தொழிலாளா் நலவாரிய அதிகாரிகள் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றவா்களிடம், உங்களது கோரிக்கைளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து தொழிலாளா்களின் ஆா்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தொடா்ந்து தொழிலாளா் நலவாரிய அலுவலக வளாகத்தில் போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.சரவணன் தலைமை வகித்தாா். சிஐடியு சங்க மாவட்டச் செயலாளா் எம்.சுப்ரமணின், கட்டுமான சங்க மாவட்ட செயலாளா் சி.ஆா்.ராஜாமுகமது ஆகியோா் நலவாரிய அதிகாரியிடம் நடத்திய பேச்சுவாா்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கி பேசினா்.