தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
அரவக்குறிச்சி அருகே காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் ஒருவா் உயிரிந்தாா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள மூலப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (65). பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் பீம் தா்வஷன் மகன் ரோஷன் (30). இவா் தடாகோவில் பகுதியில் தங்கி கூலி வேலை பாா்த்து வந்தாா்.
இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மலைக்கோவிலூா் அணுகுசாலை அருகே சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த பிச்சையா மகன் மாரியப்பன் (60) என்பவா் ஓட்டி வந்த காா் இருவா் மீதும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு கந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ரோஷனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.