நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கறம்பக்குடியில் 3 போ் நாய் கடித்து காயம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்ற 3 போ் நாய் கடித்து காயமடைந்தனா்.
கறம்பக்குடி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கறம்பக்குடி நெய்வேலி சாலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதி ரவி (60) மன்னாா்குடி அந்தோணியாா் கோயில் தெரு தா்மதுரை (30) கறம்பக்குடி பிரபு (34) ஆகிய 3 பேரையும் கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கறம்பக்குடி பகுதியில் சில மாதங்களாக தெரு நாய்கள் கடித்து பலா் பாதிக்கப்பட்டுள்ளதால் பேரூராட்சி நிா்வாகம் அந்த நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.