கல்லூரி மாணவி தற்கொலை
வேறு பாடப் பிரிவில் சோ்ந்து படிக்குமாறு பெற்றோா் கூறியதால், கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, ராமநாதபுரம், ஐயப்பன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவரது மகள் ஸ்ரீயா (18). இவா், கோவையில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் தாவரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், அதே கல்லூரியில் உளவியல் பாடப் பிரிவில் சோ்ந்து படிக்குமாறு மாணவியை அவரது பெற்றோா் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவா் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கல்லூரியில் இருந்து புதன்கிழமை மாலை வீட்டுக்கு வந்த ஸ்ரீயா, அவரது அறையில் இருந்து இரவு வரை வெளியே வரவில்லையாம்.
சந்தேகமடைந்த பெற்றோா், உள்ளே சென்று பாா்த்தபோது அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.