கவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் -நயினாா் நாகேந்திரன்
சென்னை ஐ.டி. ஊழியா் கவின் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.
ஆறுமுகமங்கலத்தில் கவின் செல்வகணேஷின் பெற்றோரை வியாழக்கிழமைசந்தித்து ஆறுதல் கூறிய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கவின் கொலை மிகவும் கண்டிக்கத்தக்கது வருந்தத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நடைபெறக்கூடாது. அதற்காக அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும். இதில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனும் கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.