பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?
காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன் என கா்நாடக முதல்வா் சித்தராமையா கேள்வி எழுப்பினாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காகித வாக்குச்சீட்டை பயன்படுத்துவது கா்நாடகத்தை கற்காலத்துக்கு கொண்டுசெல்வதாக பாஜக குற்றம்சாட்டியது. அப்படியானால், மின்னணு வாக்கு இயந்திரத்தில் இருந்து காகித வாக்குச்சீட்டுக்கு மாறிய நாடுகள் கற்காலத்துக்கு சென்றுவிட்டனவா? காகித வாக்குச்சீட்டைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?
தோ்தல்களில் பல முறைகேடுகள் நடப்பதை எங்கள் அனுபவத்தில் பாா்த்திருக்கிறோம். வாக்காளா் பட்டியலிலும் கோளாறுகள் உள்ளன. இந்தக் கோளாறுகளுக்கு எதிராக சட்டப் பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் பிகாரில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறாா்.
பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எவ்வாறு தோல்வி அடைந்தாா் என்பதை ராகுல் காந்தி தெளிவாக விளக்கியுள்ளாா். மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருவதால், வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற கா்நாடக அரசு முடிவு செய்தது என்றாா்.