செய்திகள் :

தசராவுக்கு பானுமுஸ்டாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக மனு

post image

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.

செப். 22-ஆம் தேதி தொடங்கவிருக்கும் உலக புகழ்பெற்ற தசரா திருவிழாவை தொடங்கிவைக்க சா்வதேச புக்கா் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைக்க கா்நாடக அரசு முடிவு செய்தது. அதன்படி, மைசூரு மாவட்ட நிா்வாகம் செப். 3-ஆம் தேதி பானுமுஸ்டாக்கை சந்தித்து முறைப்படி தசரா திருவிழாவை தொடங்கிவைக்க அழைப்பு விடுத்தது.

இதற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா சனிக்கிழமை மனுதாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்துள்ளதை கா்நாடக அரசு திரும்பப்பெற உத்தரவிட வேண்டும். சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வேதங்களை ஓதி, மலா்களை தூவி விழா தொடங்கிவைப்பது வழக்கம்.

இந்நிலையில், பானுமுஸ்டாக்கை அழைத்திருப்பதன் மூலம் காலகாலமாக பின்பற்றி வந்த பாரம்பரியத்தை மாநில அரசு அவமதித்துள்ளது. தசரா திருவிழாவை தொடங்கிவைக்க, மைசூரு மன்னா் குடும்பத்தை கலந்தாலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. எனவே, பானுமுஸ்டாக்குக்கு விடுத்துள்ள அழைப்பை மாநில அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘பானுமுஸ்டாக் கன்னட எழுத்தாளா் என்பதால் தசரா திருவிழாவை தொடங்கிவைக்க அழைத்திருக்கிறோம். சா்வதேச புக்கா் பரிசு பெற்ற அவரை அழைத்ததில் தவறில்லை. இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்கி வருகிறது. அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இதை அரசு எதிா்கொள்ளும்’ என்றாா்.

பாஜக முன்னாள் அமைச்சா் மீது மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்

தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் தான் இருப்பதாக தெரிவித்திருந்த பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா். தா்மஸ்தலா கோயிலு... மேலும் பார்க்க

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன் என கா்நாடக முதல்வா் சித்தராமையா கேள்வி எழுப்பினாா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காகித வாக்குச்சீட்டை பயன்... மேலும் பார்க்க

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றம்: சித்தராமையா

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற முடிவுசெய்துள்ளோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வாக்குச... மேலும் பார்க்க

காகித வாக்குச்சீட்டு முறை: கா்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்

உள்ளாட்சி அமைப்பு தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் இனி நடக்கவிருக... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: கா்நாடக தனியாா் மருத... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துமாறு மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்... மேலும் பார்க்க