காவல் நிலையம் முன் தீப்பற்றி எரிந்த காா்
பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் முன் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டிருந்த காா் சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது.
பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் முன் கடந்த 2021-ஆம் ஆண்டு குற்ற வழக்கு ஒன்றில் பறிமுதல் செய்த காா் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தக் காா் திடீரென தாமாக தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பணியிலிருந்த காவலா் வனிதா அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.