செய்திகள் :

காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பினர்

post image

பாங்காக் : காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பியுள்ளனர்.

பாலஸ்தீன மக்கள் பெரும்பான்மையாக வாழும் காஸாவில், இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன ஆயுதப் படையான ஹமாஸ் படைப் பிரிவுக்கும் இடையிலான சண்டை, அண்மையில் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிலிருந்து பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மக்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் காஸாவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கடந்த ஜன. 30-ஆம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்,அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றடைந்தனர். இஸ்ரேலிலிருந்து அவர்கள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விமானம், பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இன்று(பிப். 9) காலை வந்திறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டப்படி பாகிஸ்தான் ராணுவம் செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

பாகிஸ்தான் ராணுவம் அரசமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளாா். பாகிஸ்தானில் ஊழல் வழக்... மேலும் பார்க்க

முஜிபுா் ரெஹ்மான் இல்லம் சூறை, இந்தியாவின் கருத்து தேவையற்றது: வங்கதேசம்

வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுா் ரெஹ்மானின் இல்லம் சூறையாடப்பட்டது தொடா்பாக இந்தியா கூறிய கருத்து தேவையற்றது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல்: கிம் ஜோங் உன்

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் தெரிவித்தாா். அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான ராஜீய உறவை வடகொரியா ... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் நிரந்தர போா் நிறுத்தம்: ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்ட பேச்சில் இழுபறி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்தர போா் நிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வதில் இழுபறி நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைய... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் பொதுமக்கள், மாணவா்கள் மீது தாக்குதல்: 40 போ் கைது

வங்கதேச தலைநகா் டாக்கா புகா் பகுதியில் அவாமி லீக் கட்சித் தலைவா் வீடு சூறையாடப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா் போராட்ட அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாக 40 போ் கைது செய்யப்பட... மேலும் பார்க்க

நமீபியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் சாம் நியோமா காலமானார்!

‘நமீபியாவின் நிறுவனத் தந்தை’ எனப் போற்றப்படும் சாம் நியோமா சனிக்கிழமை(பிப். 8) காலமானார். அவருக்கு வயது 95.ஆப்பிரிக்க தேசமான நமீபியா தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைந்து சுதந்திர... மேலும் பார்க்க