Radish: சிறுநீரகக்கல் முதல் வெள்ளைப்படுதல் வரை... உதவி செய்யும் முள்ளங்கி!
நமீபியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் சாம் நியோமா காலமானார்!
‘நமீபியாவின் நிறுவனத் தந்தை’ எனப் போற்றப்படும் சாம் நியோமா சனிக்கிழமை(பிப். 8) காலமானார். அவருக்கு வயது 95.
ஆப்பிரிக்க தேசமான நமீபியா தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைந்து சுதந்திர நாடாக வித்திட்ட சுதந்திரப் போrஆட்டத் தலைவர் சாம் நியோமா நமீபியாவின் மக்களால் அந்நாட்டின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவராவார்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-09/lwt98gml/AP25040179942009.jpg)
வயது முதிர்வால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சாம் நியோமா உயிரிழந்திருக்கும் செய்தி நமீபிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், சாம் நியோமா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அந்நாட்டின் அதிபர் நங்கோலா மம்பா வெளியிட்டுள்ள பதிவில், “தாம் மிகவும் நேசித்த இந்த நாட்டுக்கும் இங்குள்ள மக்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டு சேவையாற்றிய நம் தேசத் தந்தை, நெடுநாள் வாழ்ந்து மறைந்துவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.