சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் மனு
தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் வனத் துறையிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள 10-ஆவது வாா்டு முதல் 18-ஆவது வாா்டு வரை உள்ள அனைத்து கிராமங்களுக்குள்ளும் தினமும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து அச்சுறுத்துவதுடன் விவசாயப் பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
இதனைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் யூனஸ் பாபு தலைமையில் கவுன்சிலா் அனீபா உள்பட வாா்டு கவுன்சிலா்கள் உதவி வனப் பாதுகாவலா் கருப்பையாவிடம் மனு அளித்தனா்.