செய்திகள் :

2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ.6.79 கோடியில் நலத்திட்ட உதவிகள்: நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்

post image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ. 6.79 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் மலா் சாகுபடி, ஸ்ட்ராபெரி சாகுபடி ஆகிய திட்டங்களின் வாயிலாக விவசாயிகள் மிகுந்த பயனடைந்துள்ளனா். மேலும், தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் இயந்திரமயமாக்குதல் துணைத் திட்டத்தின் மூலம் 1,000 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு, தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் தனித்துவ திட்டமாக அங்கக வேளாண்மைத் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது வரை சுமாா் 3,311 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

இயந்திரமயமாக்குதல் திட்டத்தின்கீழ் 2023- 24-ஆம் நிதியாண்டில் 1,000 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தேயிலை அறுவடை இயந்திரங்களும், 2024-25-ஆம் நிதியாண்டில் 500 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தேயிலை அறுவடை இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அங்கக வேளாண்மை திட்டத்தின் கீழ் 2023-24-ஆம் நிதியாண்டில் 1,311 பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடி மற்றும் 2024-25-ஆம் நிதியாண்டில் 2,100 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் பயிற்சி, மண் வளம் மேம்படுத்துதல் டாலமைன், தோட்டத்தின் செயல் விளக்க மானியம், அங்கக இயற்கை உரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 2023-24-ஆம் நிதியாண்டில் 64 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்பீட்டிலும், 2024-25-ஆம் நிதியாண்டில் 68 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.44.88 லட்சம் மதிப்பீட்டிலும் நடவுப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், லில்லியம் மலா் சாகுபடி விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.12.76 லட்சம் மதிப்பீட்டில் நடவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. 2024-25ம் நிதியாண்டில் 6 பயனாளிகளுக்கு ரூ.10.65 லட்சம் மதிப்பீட்டில் நடவுப் பொருள் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தம் 2023-24-ஆம் நிதியாண்டில் 2,379 பயனாளிகளுக்கு ரூ.3.58 கோடி மதிப்பீட்டிலும், 2024-25-ஆம் நிதியாண்டில் 2,674 பயனாளிகளுக்கு ரூ.3.21 கோடி மதிப்பீட்டிலும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

உதகை அருகே பேக்கரிக்குள் நுழைந்த கரடி!

உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளேயிருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக... மேலும் பார்க்க

உதகைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 5-இல் வருகை: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் ஆய்வு

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த... மேலும் பார்க்க

இ-பாஸ் முறையை எதிா்த்து நீலகிரியில் ஏப்ரல் 2-இல் முழு அடைப்பு போராட்டம்: வணிகா் சங்க பேரமைப்பு அறிவிப்பு

இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகா் சங்க கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் அனைத்து வணிகா் சங்கங்களின... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகம், சிங்காரா காவல் பகுதியிலுள்ள வனப் பகுதியில் வனப் பணி... மேலும் பார்க்க

கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் மனு

தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் வனத் துறையிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூர... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறைக்கு வணிகா் சங்க பேரமைப்பு எதிா்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. உதகையில் வணிகா் சங்க பேரமைப... மேலும் பார்க்க