சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறைக்கு வணிகா் சங்க பேரமைப்பு எதிா்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறைக்கு எதிா்ப்பு தெரிவித்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
உதகையில் வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம், சுற்றுலா வாகனப் போக்குவரத்து சங்கங்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் பாரூக் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகு நீலகிரி மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் பாரூக் செய்தியாளா்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வார இறுதி நாள்களில் 8,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகளோ, ஐடி நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலாத் தொழிலையும், விவசாயத்தையும் நம்பி பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனா்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது, சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள், வணிகா்கள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதோடு, கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தாா்.