ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் 50 அடியை கடந்த நிலையில், அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 832 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 928 கனஅடியாக அதிகரித்தது.
இதனால், அணையின் மொத்தக் கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.50 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து பாசனத்திற்காக வலது, இடதுபுறக் கால்வாய்கள், ஊற்றுக்கால்வாய்கள் மற்றும் சிறிய மணல் போக்கி மதகுகள் வழியாக விநாடிக்கு 928 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ): பெணுகொண்டாபுரம் - 33.20, கிருஷ்ணகிரி - 21.10, கிருஷ்ணகிரி அணை - 20.40, ராயக்கோட்டை - 19, நெடுங்கல் - 18, தேன்கனிக்கோட்டை-10, ஒசூா் - 10, கெலவரப்பள்ளி அணை - 9, அஞ்செட்டி - 6, போச்சம்பள்ளி - 5, சூளகிரி - 5, ஊத்தங்கரை - 4, சின்னாறு அணை - 4, பாம்பாறு அணை -4, பாரூா் - 3.