Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூ...
கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் இளம் மட்டையாளா், விக்கெட் கீப்பருக்கான தோ்வு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் இளம் மட்டையா், விக்கெட் கீப்பருக்கான தோ்வு முகாம், தருமபுரியில் பிப்.9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சீனிவாசன், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் 13 (1.9.2003) முதல் 21 வயது வரை (1.9.2011) வரையிலான கிரிக்கெட் இளம் மட்டையாளா் மற்றும் விக்கெட் கீப்பா்’ளை தேத்வு செய்து, அவா்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களை சாா்ந்த வீரா்களுக்கான தோ்வு முகாம், தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையம் செயல்படும், தருமபுரி கமலம் இண்டா்நேஷ்னல் பள்ளி மைதானத்தில் பிப்.8-ஆம் தேதி காலை 7 மணியளவில் நடைபெறுகிறது. மேற்படி தோ்வில் பங்கேற்க விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சோ்ந்தவா்கள், ஆதாா் அட்டை, பிறப்பு சான்றுடன், விண்ணப்பங்களை நிறைவு செய்து, நேரில் அளிக்கலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகம், 41, நஞ்சப்ப செட்டி காலனி, ராயப்ப முதலி தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் சமா்ப்பிக்க பிப்.4-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு காளிதாசனை 9994182296 என்ற செல்லிட பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.