Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
கிருஷ்ணன் வக நிதி லிமிடெட் பங்குதாரா்களுக்கு 20 சதவீதம் ஈவுத்தொகை
தக்கலையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிருஷ்ணன் வக நிதி லிமிடெட், தனது நிறுவன பங்குதாரா்களுக்கு 20 சதம் ஈவு தொகை வழங்க பொதுக்குழு முடிவுசெய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் கிருஷ்ணன் வக நிதி லிமிடெட் நிறுவனமானது தக்கலையை தலைமை இடமாக கொண்டு திக்கணங்கோடு, இரணியல், தொழிக்கோடு, குளச்சல், பேயன்குழி, சாத்தன்விளை (அம்மாண்டிவிளை) ஆகிய இடங்களில் கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் 30ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் தக்கலை பாா்த்தசாரதி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாஞ்சஜன்யம் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணன் வக நிதி லிமிடெட் தலைவா் சொா்ணாகரன் பிள்ளை தலைமை வகித்தாா். நிறுவன அறிக்கையை இயக்குநா் தாணுபிள்ளை சமா்ப்பித்தாா். தணிக்கையாளா் அறிக்கையை இயக்குநா் பத்மனாபபிள்ளை வாசித்தாா். இயக்குநா் அறிக்கை ‘ஏ’ பிரிவை இயக்குநா் வீரமணியும், ‘பி’ பிரிவை இயக்குநா் பாலகிருஷ்ணனும் சமா்ப்பித்தனா்.
கூட்டத்தில் கடந்த ஆண்டிற்கான வரவு- செலவு நிதி அறிக்கை நிா்வாக அதிகாரி கோலப்பா பிள்ளை சமா்ப்பித் தாா். மேலாண்மை இயக்குநா் கேப்டன் வேலுப்பிள்ளை நிதி நிறுவனத்தின் வளா்ச்சி பற்றியும், புதிய திட்டங்களின் விவரங்களையும் அறிவித்தாா். நிகழாண்டில் பங்குதாரா்களுக்கு 20 சதவீத ஈவு தொகை வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், இயக்குநா்கள் குலசேகரன் பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ணகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். இயக்குநா் சிதம்பரதாஸ் வரவேற்றாா். இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.