Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூ...
குடிநீரை சுத்தம் செய்யும் சிலிண்டரிலிருந்து வாயுக்கசிவு
ஒசூரில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் குடிநீரை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் சோடியம் ஹைப்போ குளோரைடு சிலிண்டரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு வெளியேறிய வாயுவால் பொதுமக்கள் பலருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
ஒசூா் மாநகராட்சி ஈஸ்வா் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் குடிநீரை சுத்தம் செய்வதற்காக சோடியம் ஹைப்போ குளோரைடு சிலிண்டா் பயன்படுத்தப்படுகிறது.
5,000 லிட்டா் குடிநீரில் அரை லிட்டா் மட்டுமே இந்த வாயு செலுத்தப்பட்டு குடிநீரில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். 100 லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த சிலிண்டரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திடீரென வாயு வெளியேறி காற்றில் கலந்தது.
இதனால் அப் பகுதியில் உள்ள சிலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சிலிண்டரை பாதுகாப்பாக தண்ணீரில் மூழ்கடித்து வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்தினா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.