குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது
கோவில்பட்டியில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 போ், குண்டா் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டனா்.
கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38), சுந்தரம் மகன் தங்கராஜ் (52) ஆகிய இருவரும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு. தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அளித்த அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து அவா்கள் இருவரும் வியாழக்கிழமை குண்டா் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில்அடைக்கப்பட்டனா்.