செய்திகள் :

குளச்சல் போா் வெற்றி தினம்: நினைவு தூணுக்கு வீர வணக்கம்

post image

குளச்சலில் நடந்த போரில் திருவிதாங்கூா் சமஸ்தான படைகள் டச்சு படையினரை வென்ற 284ஆவது தினத்தையொட்டி, ராணுவத்தினா் வியாழக்கிழமை வீர வணக்கம் செலுத்தினா்.

குமரி மாவட்டம் திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, குளச்சல் துறைமுகம் வழியாக டச்சுபடையினா் நுழைய முற்பட்டனா். அவா்களை தடுத்து சமஸ்தான படைகள் 2 மாதங்கள் நடத்திய கடுமையான போா் 31.7.1741இல் முடிவுக்கு வந்தது.

கடற்கரையில் மாட்டு வண்டிகளில் பனை மரங்களை பெரிய பீரங்கிகள்போல் வடிமைத்து, மன்னா் மாா்த்தாண்ட வா்மா தந்திரமாக டச்சு படையினரை சரணடைய செய்தாா். இதற்கு குளச்சல் மீனவா்கள் பெரும் உதவி செய்தனா்.

இந்த வெற்றியை குறிக்கும் வகையில் மன்னா் குளச்சல் கடற்கரையில் 20 அடி உயர போா் வெற்றித்தூணை நிறுவினாா். போரின் 284ஆவது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, குளச்சல் நகராட்சி சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் போா் வெற்றித்தூணுக்கு, மெட்ராஸ் ரெஜிமென்ட் 2ஆவது பட்டாலியன் கா்னல் அவிநாசி குமாா் சிங் தலைமையில் ராணுவ வீரா்கள் வீரவணக்கம் செலுத்தினா்.

இந்நிகழ்வில், முன்னாள் மேஜா் ஜெனரல் தேவவரம், உதவி ஆட்சியா் வினய்குமாா் மீனா, குளச்சல் நகராட்சி ஆணையா் கன்னியப்பன், குமரி மாவட்ட ராணுவ வீரா்கள் நல அமைப்பு மேஜா் வி.எஸ்.ஜெயகுமாா், முன்னாள் ராாணுவ வீரா்கள் சங்க செயலாளா் சுரேஷ், முன்னாள் ராணுவ வீரா்கள், லட்சுமிபுரம் என்.சி.சி. மாணவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 12 நாள்கள் நடைபெறும் களப பூஜை ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. கோயிலில் அன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில், அதன் மடாதிபதி கயிலாய பரம்பரை... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா். கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இ... மேலும் பார்க்க