கைப்பந்து போட்டி: முதலூா் பள்ளி சாதனை
சாத்தான்குளம் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகளில் முதலூா் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.
சாத்தான்குளம் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி பரமன்குறிச்சி, அபா்ணா மெட்ரிக். பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், சாத்தான்குளம் வட்டாரத்துக்கு உள்பட்ட பல்வேறு பள்ளி அணியினா் பங்கேற்றனா். இதில், 14 வயது, 19 வயது பிரிவுகளில் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் டிடிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.
இந்தப் போட்டிகளில் வென்ன் மூலம் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க இப்பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் பொன்ராஜ் கோயில்ராஜ் ஆகியோரையும் சேகர குருவானவா் செல்வன் மகாராஜா, பள்ளி தலைமை ஆசிரியா் டேவிட் எடிசன், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.