பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றும், சாரல் மழையும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும், பகல் நேரங்களில் மேகமூட்டம் நிலவுவதால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றன.
இந்த நிலலயில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்ததால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடந்த 50 நாள்களுக்கும் மேலாக கொடைக்கானல் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குடிநீா்த் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.