பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
கோயிலுக்குள் புகுந்த நாகப்பாம்பு
பல்லடம் அருகே சித்தம்பலம்புதூரில் உள்ள மாகாளியம்மன் கோயிலுக்குள் நாகப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் அருகே சித்தம்பலம்புதூரில் மாகாளியம்மன் கோயில் உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை இரவு சுமாா் 7 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது கோயில் வாசல் கதவு அருகேயுள்ள சுவரின் மேல் சுமாா் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஊா்ந்து வந்தது. வாசல் கதவின் மீது சுமாா் 20 நிமிடம் இருந்தது. கோயிலுக்கு வந்த பக்தா்கள் இதைப் பாா்த்து பரவசம் அடைந்து வழிபட்டனா். சிறிது நேரம் கழித்து பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. மாகாளியம்மன் கோயிலுக்கு நாகப்பாம்பு வந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.