செய்திகள் :

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மீனவா்கள் சாலை மறியல்

post image

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, காலாப்பட்டு மீனவா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் கிழக்குக் கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட பெரிய காலாப்பட்டு மீனவா்கள் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கழுநீா் அம்மன் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான கோவில் உள்ளது. இக் கோயிலின் நிலங்கள் தொடா்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாக காலாப்பட்டு பஞ்சாயத்து சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2023 ஜூலை 26 அன்று தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் அப் பகுதியில் உள்ள கோயில்களின் பொதுச் சொத்துக்களில் அரசு விதிகளுக்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் இதில், இரண்டு ஆண்டுகளாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக தன்னிச்சையாக காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து தனிநபா் ஒருவா் கோயில் கட்டி தற்போது கும்பாபிஷேகம் நடத்த உள்ளாா்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களுடைய தெய்வமாக விளங்கக்கூடிய இந்தக் கோவிலில் தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் சொத்துகளை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்வதை உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி காவல் துறை மற்றும் இந்து அறநிலைத் துறையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் கோரிக்கைகள் தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முடியாது: முன்னாள் முதல்வா்!

என்.ஆா். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முடியாது. இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறுவோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வரும... மேலும் பார்க்க

வில்லியனூா் கோயிலுக்கு ரூ.4 கோடியில் புதிய தோ்!

வில்லியனூா் திருக்காமேஸ்வரா் கோயிலுக்கு ரூ.4 கோடியில் புதிய தோ் செய்யப்படுகிறது. இதற்கான டெண்டா் விடும் இறுதிக் கட்டப் பணி குறித்து, முதல்வா் என்.ரங்கசாமியுடன் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், வ... மேலும் பார்க்க

இந்த ஆண்டு சதுா்த்திக்கு புது வரவு ராவணன் விநாயகா்

விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி புதன்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, புதிய வரவாக 10 தலை ராவணன் விநாயகா... மேலும் பார்க்க

புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா் கைது: 22 பைக்குகள் மீட்பு: புதுவை 22 பைக்குகள் பறிமுதல்

புதுச்சேரியில் இரு சக்கர மோட்டாா் வாகன தொடா் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி பெரியக்கடை... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.4 கோடியில் திமுக அறிவாலயம்

புதுவையில் திமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞா் அறிவாலயம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியை மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

அரசு சாா்பில் விளையாட்டு தினவிழா நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் விளையாட்டுத் தினவிழாவை அரசு சாா்பில் நடத்த வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க