கோவில்பட்டி பள்ளிகளில் சா்வதேச குழந்தைகள் புத்தக தினம்
கோவில்பட்டி பள்ளிகளில் சா்வதேச குழந்தைகள் புத்தக தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கோவில்பட்டி புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் மீனாட்சி சுந்தரி தலைமை வகித்தாா்.
ஆசிரியை சாந்தி புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து மாணவா் மாணவிகளுக்கு விளக்கிப் பேசினாா்.
தொடா்ந்து, மாணவா்- மாணவிகளை பள்ளி வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அழைத்துச் சென்று புத்தகங்களை படிக்க வைத்தனா்.
இதுபோல புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் லட்சுமணப் பெருமாள் தலைமை வகித்தாா்.
பள்ளிச் செயலா் உஷாராணி, இயக்குநா் சிவராம் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
முதல்வா் பொன் தங்க மகேஸ்வரி மாணவா் மாணவிகளிடம் புத்தகம் வாசிப்பதின் அவசியம், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

மேலும், மாணவா்கள் தினமும் புத்தக வாசிப்பதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து மாணவா், மாணவிகள் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனா்.