செய்திகள் :

சக மாணவனை அரிவாளால் தாக்கிய மாணவன்: ``வன்முறை வேர் படர்ந்துள்ளதா?" - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

post image

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மீது சக மாணவன் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய உதவி ஆணயர் சுரேஷ், ``8-ம் வகுப்பு படித்து வரும் இரண்டு நண்பர்களுக்கு மத்தியில் பென்சில் வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு மாணவர்களும் பேசாமல் இருந்துள்ளனர். அதன் விளைவாக, இன்று ஒரு மாணவரை மற்றொரு மாணவர் அரிவாளால் தாக்கியுள்ளார்.

சிறுவர்கள் கையில் அரிவாள்

தாக்குதலுக்கு ஆளான மாணவரின் உடல்நிலை சீராக உள்ளது. பயப்படும் அளவிற்கு எதுவுமில்லை. இந்த தாக்குதலை தடுக்க முயன்ற சமூக அறிவியல் ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர் தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவனை குழந்தைகள் நலத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம். விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்

காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது.

அதுவும், “பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது” எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல்சிறுநீரகக் கற்கள் உருவாக ... மேலும் பார்க்க

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க

``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அரசு தகவல்!

நேற்றைய இரவு பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லையில் தீவிரமான துப்பாக்கிச் சூடு, பீரங்கி தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் மற்றும் தயாரிப்புகள் குறித்து விளக்க இந்... மேலும் பார்க்க

Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்

இந்தியா - பாகிஸ்தான் மோதலில் ஆந்திர பிரதேசம் மாநிலம், ஶ்ரீ சத்ய சாய் மாவட்டம், கோரண்ட்லா மண்டல் பகுதியில் புட்டகுண்டலபள்ளேகிராமத்துக்கு அருகில் உள்ள கல்லி தண்டா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீர... மேலும் பார்க்க