சமயபுரத்தில் 9 அடி உயர கற்சிலை கண்டெடுப்பு
திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் குடிநீா் குழாய் அமைக்க செவ்வாய்க்கிழமை பள்ளம் தோண்டிய போது, 9 அடி உயர கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
சமயபுரம் தெற்கு ரத வீதி பகுதியில் ச.கண்ணனூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக செவ்வாய்க்கிழமை பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
அப்போது, 9 அடி உயரமுள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, பணியாளா்கள், பேரூராட்சி நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினரிடம் கற்சிலையை ஒப்படைத்தனா். அந்தச் சிலை துவார பாலகா் சிலையாக இருக்கக் கூடும் என்று கூறப்பட்டாலும், சிலை சேதமடைந்த நிலையில் இருப்பதால், தொல்லியல் துறை ஆய்வுக்கு பின்னரே சிலை குறித்த முழுவிவரங்களும் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.